Monday, November 30, 2009

டெம்ப்லேட் விண்ட் க்ரைஸ் மேரி - சில குறிப்புகள்

டெம்ப்லேட் இங்கிருந்து http://www.deluxetemplates.net/2009/10/wind-cries-mary.html எடுக்கப்பட்டது.


இந்த விண்ட் க்ரைஸ் மேரி அருமையான டெம்ப்லேட். ஒரு பின்னணிப் படம், கண்ணை உறுத்தாத நிறம், ஒரு மெனு - வலது புறம். ஆனால் இதன் அகலம் சற்று குறைவாக இருக்கிறது. ஆனால், HTML ல் சிறிது மாற்றம் செய்தால் கொஞ்சம் அகலமாக மாற்றி விடலாம்.

முதலில் http://www.deluxetemplates.net/2009/10/wind-cries-mary.html இங்கே சென்று டெம்ப்லேட்டை டவுன்லோடு செய்துகொள்ளவும். zip வடிவில் கிடைக்கும். அதை unzip செய்து xml file ஐ எடுத்து வைத்துக்கொள்ளவும்.


பின்பு, Dashboard -> Layout -> Edit HTML செல்லவும். இதில் XML File ஐ அப்லோடு செய்யவும். அதற்கு முன் உங்களுடைய பழைய டெம்ப்லேட்டை Download Full Template ஐ அழுத்தி எடுத்து வைத்துக்கொள்ளவும். மாற்றியதில் எதுவும் ஒத்துவரவில்லை அல்லது திருப்தி இல்லையெனில் இதைப் பயன்படுத்தி பழைய வடிவுக்கு கொண்டுவந்துவிடலாம்.

இப்போது அந்த டெம்ப்லேட்டுக்கு உங்கள் வலைப்பூ மாறிவிடும். அகலத்தை சற்று கூட்டவும், எழுத்துக்களின் அளவுகளை சிறிது சரிசெய்யவும் கீழ்வரும் மாற்றங்களைச் செய்யவும்.

1. Edit Template கட்டத்திற்குள்ளே #outer-wrapper என்பதை தேடிப்பார்க்கவும். அதற்கான அளவுகளில் width:840px என்பதினை width980px என்று மாற்றவும்.
2. #header-wrapper என்பதினைத் தேடி அதன் - width:840px என்பதினை width980px என்று மாற்றவும்.
3. #main-wrapper என்பதினைத் தேடி அதன் - width:580px என்பதினை width720px என்று மாற்றவும்.
 இப்போது அகலம் சற்று கூடியிருக்கும்.

ஆங்கிலத்தில் பதிவின் எழுத்து அளவுகள் சரியாகத் தெரியும். ஆனால் தமிழில் எழுத்துக்கள் சற்று பெரிதாகத் தெரியும் (பெரும்பாலான டெம்ப்லேட்டுகளில் இந்தப் பிரச்சனை உண்டு). இதனைச் சரிசெய்ய,
.post-body என்பதினைத் தேடி, அதன் font-size:14px என்பதினை font-size:12px என்று மாற்றவும்.
மேலும் எழுத்து நன்றாக கருப்பு நிறத்தில் தெரிய, color:#000 என்பதினைச் சேர்க்கவும். மொத்தத்தில் இப்படி இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
.post-body {
font-size:12px;
line-height:1.6em;
margin:0 0 0.75em;
color:#000;
}


மேலும், பதிவின் தலைப்பு சற்று பெரிய அளவாக இருக்கிறது. அதனைக் குறைக்க,
.post h3 எனப்தினைத் தேடி, அதன் font-size:20px என்பதினை font-size:16px என்று மாற்றவும்.

இப்போது டெம்ப்லேட் அழகாகப் பொருந்தியிருக்கும்.

-அதி பிரதாபன்.

6 comments:

Mrs.Menagasathia said...

// zip வடிவில் கிடைக்கும். அதை unzip செய்து xml file ஐ எடுத்து வைத்துக்கொள்ளவும்.
//அதை எப்ப்டி செய்றதுன்னு சொல்லுங்களேன்...

வால்பையன் said...

என்னுடய டெம்ப்ளட்டையும் கொஞ்சம் அகலப்படுத்த வேண்டும்,

ஐடியா ப்ளீஸ்!

அதி பிரதாபன் said...

Mrs.Menagasathia,

http://www.pkware.com/index.php?option=com_content&task=view&id=55&Itemid=72&dtype=soho&dlp=PKD
அல்லது
http://www.7-zip.org/

இந்த தளத்தில் கிடைக்கும் மென்பொருளை தரவிரக்கம் செய்து, தங்களது கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து வைத்துவிட்டால், இதைச் செய்யலாம்.


வால்,
உங்களுடைய டெம்ப்லேட் ஏற்கனவே 1000px அகலம் உள்ளது. இதற்கு மேல் விரிவு செய்வது நல்லதல்ல. மேலும் விபரங்களை பின்பு சொல்கிறேன்.

தங்கள் வருகைக்கு நன்றிகள்.

shortfilmindia.com said...

//உங்களுடைய டெம்ப்லேட் ஏற்கனவே 1000px அகலம் உள்ளது. இதற்கு மேல் விரிவு செய்வது நல்லதல்ல.//

ஆமாம் வால் ரொம்ப விரிக்க கூடாது..:) ஆகாது. என்ன பிஸ்கி நான்சொல்றது..

அஹோரி said...

Good one.

அதி பிரதாபன் said...

//shortfilmindia.com said...
ஆமாம் வால் ரொம்ப விரிக்க கூடாது..:) ஆகாது. என்ன பிஸ்கி நான்சொல்றது..//

அலோவ்... எங்க வந்து என்ன பேசுறீங்க. கச்சேரியெல்லாம் ஏதோ டாட் காம்ல வச்சுக்க்குங்க. இது கொஞ்சம் சீரியசான இடம்.

நன்றி அஹோரி.